நைமிசா முனிவர்கள் சௌத்தியை நோக்கி "தாங்கள் குறிப்பிட்ட சமந்தபஞ்சகம் (குருஷேத்ரம்) பற்றி மேலும் கூருங்கள்"
"திரேத மற்றும் துவாபர யுகங்களின் இடைப்பட்ட காலத்தில் பரசுராமர் பழிவாங்க உலகில் உள்ள அனைத்து க்ஷத்ரிய ஆண்களையும் கொன்று குவித்தார். அவர்களின் இரத்தம் கொண்டு சமந்தபஞ்சகத்தில் ஐந்து குளங்களை நிரப்பினார். அந்த குளங்களின் நடுவில் காட்சியழித்த தனது முன்னோர்களுக்கு அதை சமர்ப்பணம் செய்தார். அதனால் சாந்தி அடைந்த முன்னோர்களில் முதன்மையானவரான 'ரிச்சிகா' வேண்டும் வரம் கேள் பரசுராமா என்றார்."
கோபத்தில் தான் க்ஷத்ரியர்களை அழித்த பாவத்தை போக்குமாறு கேட்டார் பரசுராமர். அதோடு தான் நிறுவிய இந்த குளங்கள் புகழ் பெற்ற புனித தலமாக வேண்டும் என்றும் வேண்டினார். அவர்களும் "அப்படியே ஆகட்டும். மன அமைதி கொள்"
அன்று முதல் சமந்தபஞ்சகம் ஒரு புனித தலமானது. உலகில் உள்ள அனைத்து இடங்களின் பெயர்களும் இப்படியே அதன் வரலாற்றை விவரிக்கும் விதத்தில் அமைய வேண்டும் என சான்றோர்களால் கூறபடுகிறது.
இதே சமந்தபஞ்சகத்தில் தான், துவாபர மற்றும் கலி யுகத்தின் இடையில், கௌரவர்கள் பாண்டவர்கள் நடுவிலான யுத்தம் நடைபெற்றது. அந்த யுத்தத்தில் 18 அக்ஷௌனி படைகள் போர் செய்ய அணிவகுத்து நின்றன. அங்கே வந்த அனைவரும், அங்கேயே மாண்டும் போயினர்.
நைமிசா முனிவர்கள், அக்ஷௌனி பற்றி சற்று விளக்கமாக சொல்லுங்கள் சௌத்தி என்றனர்.
1 ரதம், 1 யானை, 5 காலாட்படை வீரர்கள், 3 குதிரைகள் கொண்டது ஒரு பட்டி.
3 பட்டி = 1 சேன முகம்.
3 சேன முகம் = 1 குல்மா.
3 குல்மா = 1 கணா
3 கணா = 1 வாஹினி
3 வாஹினி = 1 பிரிதனா
3 பிரிதனா = 1 சாமு
3 சாமு = 1 அணிகினி
10 அணிகினி = 1 அக்ஷௌனி
அகவே ஒரு அக்ஷௌனி என்பது 21,870 ரதங்கள், 21,870 யானைகள், 1,09,350 காலாட்படை வீரர்கள், 65,610 குதிரைகள் ஆகும்.
அற்புதமான செயல்களை செய்யும் காலம், கௌரவர்களை காரணமாக வைத்து அனைவரையும் அங்கே வரவழைத்து, அனைவரையும் அழித்தது.
சகல ஆயுதங்களிலும் வல்லவரான பீஷ்மர் 10 நாட்கள் போரை நடத்தினார். துரோணர் கௌரவ வாஹினிகளை 5 நாட்கள் காத்தார். எதிரி படைகளை பாழாக்கும் கர்ணன் 2 நாட்கள் போர் புரிந்தான். சல்யன் 1/2 நாள். மற்றொரு 1/2 நாள், துரியோதனன் பீமனுடனான சண்டை நடந்தது. அந்த நாள் முடிவில், ஆபத்தை உணராமல் இரவில் உறங்கிகொண்டிருந்த யுதிஷ்டரின் படையை அஷ்வதாமனும் கிருபரும் கொன்று தீர்த்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக