ஓம் - நரனையும் நாராயணனையும் சரஸ்வதியையும் வணங்கி ஒருவர் ஜெயத்தை சொல்லிடவேண்டும்.
மகாபாரதத்தின் முதல் பெயர் ஜெயம் என்று கூறபடுகிறது.
லோமஹர்ஷனரின் மகனான உக்ராஸ்ரவர், சௌத்தி என்ற குல பெயர் கொண்டவர். அவர் அனைத்து வேதங்களையும் நன்கு கற்றவர். ஒரு நாள் நைமிஷா வனத்தில் சௌனகர் நடத்திய 12 வருட யாகத்தை வந்தடைந்தார். அங்கிருந்த அனைத்து முனிவர்களும் அவரை வணங்கி, அவருக்கு உட்கார இடம் தந்தனர். அவர் அமர்ந்த பிறகு " அய்யா நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? உங்கள் நேரத்தை எங்கு கழித்தீர்? எல்லாவற்றையும் விவரமாக சொல்லவும் " என்று கேட்டனர்.
பேச்சில் வல்லவரான சௌத்தி, "நான் மன்னர் பரிக்ஷிட் மகனான ஜனமேஜய நடத்திய பாம்பு யாகத்தில் இருந்து வருகிறேன். அங்கு வியாசர் எழுதிய மகாபாரத்தை, அவரது சீடர் வைசம்பாயனர் கூற கேட்டேன். பிறகு பல புண்ணிய நதிகளையும் கோவில்களையும் தரிசித்து விட்டு, பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் யுத்தம் நடைபெற்ற சமந்தபஞ்சகம்(குருஷேத்ரம்) சென்றுவிட்டு இங்கு உங்களை பார்க்க வந்தேன்."
சௌனகர் சௌத்தியை பார்த்து "எங்களுக்கும் மகாபாரத்தை கேட்க ஆவலாக உள்ளது, தயவு செய்து சொல்லுங்கள்".
சௌத்தி, "ஆதியில் இருந்து உள்ள ஈசனையும், மாற்றம் இல்லாத பிரமனையும், உருவமாகி உருவமில்லா இருந்தும் இல்லாத முடிவிலா முதலவனான விஷ்ணுவையும் வணங்கி, அனைத்து வேதங்களையும், சாஸ்திரங்களையும் உள்ளடக்கிய வியாசரின் மகாபாரதத்தை கூறுகிறேன்"
இந்த உலகம் ஒளியில்லாமல் இருளால் சுழபட்டிருந்த போது எல்லா உயரினங்களின் காரணமான, யுகத்தின் ஆரம்பத்தில் உருவான பிரம்மாண்டம் என்றழைக்கபட்ட மாபெரும் முட்டை ஒன்று தோன்றியது.
அதில் இருந்து முதலில் பிரம்மா தோன்றினார், தொடர்ந்து சூரகுரு மற்றும் ஸ்தாணு வந்தனர்.
பிறகு 21 பிரஜபதிகள் (மனு, வசிஷ்டர், பரமேஸ்தி, 10 பிரசேதர்கள், தக்ஷன் மற்றும் தக்ஷனின் 7 மகன்கள்).
அதன்பிறகு விஸ்வ தேவர்கள், ஆதித்யர்கள், வசுக்கள், அஸ்வின் இரட்டையர்கள், யக்ஷர்கள், சத்யர்கள், பிசாசங்கள், குஹ்யகர்கள் மற்றும் பித்ரிகள்.
அதை தொடர்ந்து தேவர்கள், பிராமரிஷிகள், ராஜரிஷிகள் தோன்றினர்.
நீர், சொர்க்கம், பூமி, ஆகாயம், வருடங்கள், காலங்கள், மாதங்கள், பட்சங்கள், பகல், இரவு என மனிதர்களுக்கு தெரிந்த அனைத்தும் தோன்றின.
இவ்வாறாக இந்த அண்டத்தில் படைக்க பட்ட அனைத்தும், அசைவது அசையாதது, யுகத்தின் முடிவில் உலகம் அழியும் பொழுது அழியும். அடுத்த யுகம் தோன்றும் பொழுது அனைத்தும் மறுபடியும் படைக்கப்படும். இப்படி ஒரு சக்கரம் போல யுகங்கள் முடிவில்லாமல் சுழன்று கொண்டேயிருக்கும்.
நான்கு வேதங்களையும், நீண்ட தவம் செய்து, அலசி ஆராய்ந்து வியாசர் மகாபாரத்தை இயற்றினார். அவர் இந்த வரலாற்றை நிறைவு செய்த பிறகு, எப்படி இதை நாம் மற்றவர்களுக்கு சென்றடையுமாறு செய்வது என்ற குழப்பத்தில் இருந்தார். அவரது இந்த குழப்பதை பார்த்த பிரம்மா, அவர் முன்னே தோன்றினார். வியாசர் பிரம்மாவை வணங்கி, "தேவா நான் இயற்றிய இந்த மகாபாரத வரலாற்றை எழுத இந்த பூவுலகில் யாரும் இல்லை. இதற்கு தாங்கள் எனக்கு உதவி செய்ய வேண்டும்" என வேண்டினார்.
பிரம்மா வியாசரிடம் "உனக்கு விநாயகர் உதவி செய்வார். நீ அவரை வேண்டி தவம் செய்" என்று கூறி தனது இருப்பிடம் சென்றார். வியாசரும் விநாயகரை வேண்டி தவம் செய்தார். தடைகளை தகர்க்கும் கணேசன் வியாசர் முன் தோன்றினார். விநாயகரிடம், வியாசர் தனது மகாபாரத்தை எழுதுமாறு வேண்டினார்.
விநாயகரும் சம்மதித்தார் ஆனால் ஒரு நிபந்தனையோடு, "எனது எழுத்தாணி ஒரு கணமும் நிற்கமுடியாத வேகத்தில் கதையை சொல்வதாய் இருந்தால் மட்டுமே எழுதுகிறேன்" என்றார்.
வேறு வழியின்றி வியாசரும் ஒப்புக்கொண்டார், "உங்களுக்கு புரியாத எதாவது சொல்லோ வாக்கியமோ வந்தால், அதை புரியாமல் எழுதகூடாது" என்று வியாசரும் ஒரு நிபந்தனை விதித்தார். விநாயகரும் சம்மதித்தார்.
வியாசர் சொல்ல விநாயகர் எழுத தொடங்கினார். எப்பொழுதெல்லாம் விநாயகர் வியாசர் வேகத்துக்கு அருகில் வருகிறாரோ, அப்பொழுது வியாசர் ஒரு சுட்சமமான ஸ்லோகத்தை சொல்லுவார். விநாயகரும் எழுதுவதை நிறுத்தி அதை புரிந்துகொண்டு பிறகு எழுத ஆரம்பிப்பார். இவ்வாறாக வியாசர் சொன்ன கடினமான ஸ்லோகங்கள் மட்டுமே 8800.
மகாபாரதம் ஒரு மாபெரும் மரம் போன்றது. நான் இப்பொழுது இந்த மரத்தின் சுவை மிகுந்த பழங்கள் மற்றும் நறுமணமிக்க மலர்களை பற்றியும் சுருக்கமாக சொல்லுகிறேன்.
முன்பு ஒரு காலத்தில், பீஷ்மர் மற்றும் தாய் சத்யவதி ஆலோசனைபடி, வியாசர் மன்னன் விசித்ரவிரியனின் இரண்டு மனைவிகளுக்கு முன்று மகன்களை தந்தார் (திருதராஷ்டிரா, பாண்டு மற்றும் விதுரன்). அதன் பிறகு வியாசர் தனது துறவறத்தை தொடர சென்றார்.
அவர்கள் அனைவரும் பிறந்து, வளர்ந்து, மேலோகம் சென்று மிகுந்த காலங்கள் கழித்தே வியாசர் மகாபாரத்தை ஜனமேஜய பாம்பு யாகத்தில் தனது சீடர் வைசம்பாயனர் மூலமாக உலகிற்கு அளித்தார்.
(பாண்டு -> அர்ஜுனன் -> அபிமன்யு -> பரிட்சித் -> ஜனமேஜயன்)
அதில் வியாசர் குரு குலத்தின் பெருமையையும், நல்ல கொள்கையுடைய காந்தாரி, ஞானம் மிகுந்த விதுரன், நிலையான குந்தி பற்றியும் முழுமையாக பாடியுள்ளார். அந்த ஒயர்ந்த முனிவர், வாசுதேவரின் தெய்வீகத்தையும், பாண்டவர்களின் நேர்மையும் மற்றும் தீய குணம் கொண்ட திருதிரஷ்ட்ரன் மகன்கள் பற்றியும் தெளிவாக கூறியுள்ளார்.
யுதிஷ்திரர் நன்னெறியும் நேர்மையுமான ஒரு பெரிய மரம். அர்ஜுனன் அதன் உடல், பீமன் அதன் கிளை, மாத்ரியின் இரண்டு புதல்வர்கள் (நகுலன், சகாதேவன்) அதன் பழம் மற்றும் பூக்கள். கிருஷ்ணா, பிரம்மா,அந்தணர்கள் அதன் வேர் போல.
பாண்டு தனது அறிவாலும் வீரத்தாலும் பல நாடுகளை தன் எல்லைக்குள் கொண்டு வந்தான். ஒரு நாள் காட்டிற்கு வேட்டையாட சென்ற பொது அங்கு இன்புற்றிருந்த இரு மான்களை கொன்றுவிட்டான். அதனால் அடைந்த சாபத்தின் காரணமாக அவனால் தன்னுடைய மனைவிகளுடன் (குந்தி, மாத்ரி) சேரமுடியாமல் போனது.
அதனால் தங்கள் குலம் முடியாமல் காப்பதற்காக அவனது மனைவிகள் தர்மா, வாயு, இந்திரா மற்றும் அஸ்வின் இரட்டை தேவர்கள் மூலம் குழந்தைகளை பெற்றனர். மாபெரும் முனிவர்கள் நிறைந்த அந்த வனத்தில் இரண்டு தாய்களாலும் வளர்க்கப்பட்டவர்களை, முனிவர்கள் அழைத்து சென்று திருதிராஷ்ட்ரன் அரசவையில் ஒப்படைத்தனர். இவர்கள் தான் பாண்டவர்கள். உங்களுடைய மகன்கள், சகோதர்கள் ஆவர்.
கௌரவர்கள் அதை பார்த்து கொண்டு இருக்கும் போது, அங்கிருந்த மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஆர்பாரம் செய்தனர். அப்போது சிலர் இவர்கள் பாண்டவர்கள் என்பதை எப்படி நம்புவது, பாண்டு இறந்து பல வருடங்கள் ஆகிவிட்டனவே என்றனர். அப்போது அங்கே "இவர்கள் பாண்டவர்கள், இவர்கள் வரவேற்கபடட்டும்" என ஒரு அசரீரி ஒலித்தது. அதனால் அனைவரது சந்தேகமும் தீர்ந்து, பாண்டவர்களை பலத்த கரகோஷத்தோடு வரவேற்றனர்.
அனைத்து வேதங்கள் மற்றும் சாஸ்திரங்களையும் கற்ற பாண்டவர்கள் அனைவருடைய மதிப்பும் மரியாதையையும் அன்பையும் பெற்று அங்க வசித்தனர்.
அனைத்து பெரியவர்களுக்கும் யுதிஷ்டிரனின் நேர்மையும் ஒழுக்கமும், அர்ஜுனனின் வீரமும், குந்தியின் பணிவிலும், நகுலன் சகாதேவனின் அடக்கத்தையும் கண்டு மெச்சினர்.
கொஞ்ச காலம் கழித்து அர்ஜுனன் தனது வில்லாற்றளால் திரௌபதியை சுயம்வரத்தில் வென்றான். அன்று முதல் அவனுடைய வில் திறமை அனைவரின் மதிபிற்குள்ளாகியது. போர்களத்திலும் அவனை வீழ்த்த எதிரிகளால் முடியவில்லை. தனது அரசன் (யுதிஷ்டிரன்) நடத்திய ராஜசூய யாகதிற்காக அனைத்து அரசர்களையும் வென்றான்.
துரியோதனன் அந்த யாகத்திற்கு வந்த போது பாண்டவர்களின் செல்வம் நிறைந்து இறைந்து கிடப்பதை பார்த்தான். தங்கம், வைரம், நகைகள், நவரத்தினங்கள், யானைகள், குதிரைகள், பசுக்கள் என செல்வா செழிப்பாய் இருப்பதை பார்த்து, பொறமை கொண்டான். அங்கே அவன் மாயா (அசுரர்களின் தலைமை சிற்பி) பாண்டவர்களுக்காக கட்டிய மாளிகையை சுற்றி பார்த்து கொண்டு இருக்கும் போது அந்த மாளிகையின் மாயைகளால் தடுமாறினான். பீமன் சிறு புத்தியுடன் அதை பார்த்து சிரித்தான்.
துரியோதனின் இந்த பொறாமையும், கவலையும் திருதிராஷ்ற்றனுக்கு தெரியவந்தது. துரியோதனன் மேல் உள்ள பாசத்தினால், யுதிஷ்ட்ரனுடன் பகடை விளையாட அனுமதி தந்தார். இதை அறிந்த வாசுதேவர், மிகுந்த கோபம் கொண்டார். எதிலும் தலையிடாமல் நடக்கும் ஆட்டத்தை பார்த்தார். விதுரன், பீஷ்மர், துரோணர், கிருபர் என அனைவரும் இருந்தும் நடக்கும்அநீதிகளை பார்த்து, இந்த க்ஷத்ரியர்கள் ஒருவரை ஒருவர் அழித்துக்கொள்ள போருக்கு வழிசெய்தார்.

வியாசர் |